சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது..!

0 8897
சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது

போக்குவரத்துக் கழகத்தில், வேலை வாங்கித் தருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் கணேசன், மத்திய குற்றப்பிரிவுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கணேசனின், சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகர் வீடு, மற்றும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.

அப்போது, கிடைத்த ஆதாரங்கள், அண்மையில், செந்தில்பாலாஜியிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், கணேசன் கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments