செங்கல்பட்டு : கிணற்றில் விழுந்து 2 மகள்கள் பலி ; துடிக்கும் கூலி தொழிலாளியின் குடும்பம் !

செங்கல்பட்டு அருகே கூலி தொழிலாளி மகள்கள் இரண்டு பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தையடுத்த, ஆமைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன்- சீதா தம்பதி. இருவரும் கூலி தொழிலாளிகள் . இந்த தம்பதிக்கு பிரியங்கா, செண்பகவள்ளி என்று இரு மகள்களும் ஒரு மகனும் உண்டு. நேற்று வழக்கம் போல் பெற்றோர் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் மாலை வீடு திரும்பிய பெற்றோர் தங்களது மகள்கள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்ச்சியடைந்தனர். இதையடுத்து, மகள்களை நேற்றிரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று காலை கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் , சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொது மக்கள் உதவியுடன் போலீசார் கிணற்றிலிருந்து சடலங்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கிணற்றில் மாணவிகள் விழுந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா ?என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன சிறுமிகளில் பிரியங்கா (வயது 16) நத்தம் அரசு பள்ளியில் 10- ஆம் வகுப்பும் இளைய மகள் செண்பகவல்லி (வயது 12) வெங்கபாக்கம் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
Comments