மெரினா கடற்கரையைப் பொதுமக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன்? - நீதிபதிகள்

மெரினா கடற்கரையைப் பொதுமக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன்? - நீதிபதிகள்
மெரினா கடற்கரையைப் பொதுமக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன் என வினவிய சென்னை உயர் நீதிமன்றம், அரசு உரிய முடிவு எடுக்காவிட்டால் உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.
சென்னை மெரினாவில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது, கடற்கரையைத் தூய்மைப்படுத்துவது குறித்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மெரினா கடற்கரை பொதுமக்களுக்காக எப்போது திறக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
நவம்பர் இறுதி வரை மெரினாவைத் திறக்க வாய்ப்பில்லை என அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையைப் பொதுமக்களுக்குத் திறப்பதில் தாமதம் ஏன் என வினவிய நீதிபதிகள், அரசு உரிய முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
Comments