விவசாயிகள் குறித்து மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயியான தன்னிடம் கேட்டால் தெரியும்? - முதலமைச்சர்

திமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க. ஸ்டாலின் அனுமதி கொடுத்ததுதான் தூத்துக்குடி பிரச்சனைக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் பேசிய அவர், அங்கு விமானநிலைய விரிவாக்க பணிக்கு தேவைப்படும் 106 ஏக்கர் நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த 995 கோடி ரூபாய் ஒதுக்கபட்டு உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பிரச்சனை நடக்க 100 சதவிகிதம் ஸ்டாலின் தான் பொறுப்பு என்றும் திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் விரிவாக்கதிற்கு நிலம் வழங்கியது குறித்து அவை குறிப்பில் ஆதாரம் உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், கருத்து கேட்பு கூட்டத்தில் பெறபட்ட ஆலோசனைகளை அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். போலி விவசாயி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, தாம் பிறப்பிலேயே விவசாயி என்றும், தன்னை விமர்சிப்பதன் மூலம் தமிழக விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார் என்றார்.
Comments