பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டு புகார்கள் அதிர்ச்சியளிக்கிறது- மு.க. ஸ்டாலின்

0 4123
பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டு புகார்கள் அதிர்ச்சியளிக்கிறது- மு.க. ஸ்டாலின்

பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், கொரோனா’ காலத்தில் பீகார் தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத் தேர்தலையும், தேர்தல் ஆணையம் நடத்தியிருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும் பொலிவையும் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி முன்வைத்துள்ள முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது எனவும், தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது எனவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments