கஞ்சா புகைத்த இளைஞர்; புத்திமதி கூறிய தாய் மாமன் வெட்டிக் கொலை

0 5505

செங்கல்பட்டு அருகே கஞ்சா புகைத்த இளைஞருக்கு புத்திமதி கூறிய தாய்மாமன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் கோமான் நகர் பகுதியை சேர்ந்த சாமுவேல் ( வயது55). தோட்ட காவலாளியான இவர் நேற்று காலை தான் பணியாற்றும் தோட்டத்தருகே காலைக்கடனை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த இருவர் சாமுவேலை சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட சாமுவேலுக்கும் அக்காள் மரகதம் என்பவரின் குடும்பத்துக்கு சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லை.

இந்நிலையில், சாமுவேல் வேலை பார்த்த தோட்டத்தருகே அக்காள் மகன் விமல்ராஜ் தன் நண்பர் சகாய ராஜுடன் சேர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த சாமுவேல் தன் மருமகனுக்கு புத்திமதி கூறியுள்ளார். இனிமேல் கஞ்சா புகைத்தால், அக்காவிடம் கூறி விடுவேன் என்று விமல்ராஜை சாமுவேல் எச்சரித்துள்ளார். இதனால், பயந்து போன விமல்ராஜ், கஞ்சா புகைப்பதை தாய்மாமா வீட்டில் கூறி விடுவார் என்கிற பயத்தில் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கேளம்பாக்கம் போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments