கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களில் 20சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம்

0 2528
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களில் 20சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தி லான்செட் சைக்காட்ரி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், அமெரிக்காவைச் சேர்ந்த 6கோடியே 90லட்சம் மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் பதிவுகளும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த ஐந்தில் ஒருவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நோயாளிகளுக்கு கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவை இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments