தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...கணக்கில் வராத ரூ.2.77 லட்சம் பறிமுதல்

0 2637
தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...கணக்கில் வராத ரூ.2.77 லட்சம் பறிமுதல்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 2லட்சத்து 77ஆயிரத்து 300 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.  

மதுரை மற்றும் நாகை மாவட்டங்களில் டி.கல்லுப்பட்டி மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 77ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

சென்னை மாதவரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் 30ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலகத்தில் 21ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 49 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments