புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாய அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு

0 716
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாய அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பஞ்சாப் விவசாய அமைப்புகளை வரும் 13-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக வேளாண் அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த மாநிலத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments