இந்தியா - ஆஸி அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

0 2383
இந்தியா - ஆஸி அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

அடிலெய்டில் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அடிலெய்டு மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகர்களுக்கு மட்டுமே  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments