இந்தியா - ஆஸி அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா - ஆஸி அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி
அடிலெய்டில் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அடிலெய்டு மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Comments