ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,136 சரிவு

0 4552
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,136 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1,136 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த 2ம் தேதி 38 ஆயிரத்து 72 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, படிப்படியாக உயர்ந்து நேற்று 39 ஆயிரத்து 376 ரூபாயாக விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று 4,922 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 142 ரூபாய் குறைந்து 4,780 ரூபாயாக விற்பனையானது.

இதேபோல் சவரன் தங்கம் 1,136 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 240 ரூபாயாக விற்பனையானது.

நேற்று 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று 3 ஆயிரத்து 900 ரூபாய் குறைந்து, 67 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments