சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்தது

0 8854
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1,248 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த 2ம் தேதி 38 ஆயிரத்து 72 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, படிப்படியாக உயர்ந்து நேற்று 39 ஆயிரத்து 376 ரூபாயாக விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

நேற்று 4,922 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 156 ரூபாய் குறைந்து, 4,766 ரூபாயாக விற்பனையாகிறது. இதேபோல் சவரன் தங்கம் விலை 1,248 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 128 ரூபாயாக விற்பனையாகிறது.

ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை நேற்று 71 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் இன்று 4,100 ரூபாய் சரிந்து 66 ஆயிரத்து 900 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments