காஷ்மீர் எல்லையில் 250 - 300 தீவிரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பு: பாதுகாப்புப் படையினர் தகவல்

0 573
காஷ்மீர் எல்லையில் 250 - 300 தீவிரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பு: பாதுகாப்புப் படையினர் தகவல்

இந்தியாவில் ஊடுருவத் தயாராக ஜம்மு காஷ்மீர் எல்லையில் 250 முதல் 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குப்வாரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சுரிந்தர் பன்வார், கடந்த ஆண்டு 140 தீவிரவாதிகள் ஊடுருவிய நிலையில் நடப்பாண்டு 25 முதல் 30 பேர் வரை மட்டுமே ஊடுருவியதாகக் குறிப்பிட்டார்.

பனிப்பொழிவுக்கு முன்பாக 250 முதல் 300 தீவிரவாதிகள் ஊடுருவத் தயாராக இருப்பதாகவும், அவர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments