தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்க உத்தரவிட்ட விவகாரம் : தூதரகம் மூலம் பிரதமர் மோடிக்கு திமுக கோரிக்கை

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 121 படகு களை உடைக்க இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க, தூதகரம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக பிரதமர் நரேந்திரமோடியை தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்களின் நலன் காக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.
Comments