இந்திய எல்லைக்கு அருகில் புதிய ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க, சீன அதிபர் ஜி ஜின் பிங், அதிகாரிகளுக்கு உத்தரவு

0 1364
இந்திய எல்லைக்கு அருகே நடைபெறும் புதிய ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய எல்லைக்கு அருகே நடைபெறும் புதிய ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் தென்மேற்கே உள்ள சிசுவான் மாகாணத்தில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் லின்ஜி பகுதிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் 'காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மிக விரைவாக முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். இந்த புதிய ரெயில் பாதை அருணாச்சபிரதேச எல்லைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments