தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டிக் கொலை..! ஆக்கிரமிப்பு நிலத்தில் நடப்பட்டிருந்த கல்லை பிடுங்கி எறிந்ததால் ஆத்திரம்?

0 13689
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நில ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட முயன்றதால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நில ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியிட முயன்றதால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் என்ற அந்த செய்தியாளரை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ரௌடிகள் நவமணி, வெங்கடேஷ் விக்னேஷ் மனோஜ் கைது செய்யப்பட்டனர்.

நல்லூர் ஏரி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நவமணி கற்களை நட்டு வைத்திருந்தாகவும் அதனை மோசஸ் பிடுங்கி எறிந்ததால் அது தொடர்பான செய்தி வெளியிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மோசஸை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments