விருத்தாச்சலம் கிளைச் சிறை விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5வது நாளாக தொடர் போராட்டம்

0 1798

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிளைச் சிறை விசாரணை கைதி செல்வகுமார் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பண்ருட்டியை சேர்ந்த செல்வமுருகன், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

நெய்வேலி போலீசாரின் சித்திரவதையால் தான் செல்வ முருகன் உயிரிழந்ததாகவும் இது குறித்த மாஜிஸ்திரேட் விசாரணை திருப்தி அளிக்கவில்லை எனக்கூறியும் குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரியும், மறு பிரேதப்பரிசோதனை செய்ய வலியுறுத்தியும் செல்வ முருகன் மனைவி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments