நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் காலதாமதம் செய்ததாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அபராதம்

0 658

நீதிமன்ற உத்தரவை காலதாமதமாக செயல்படுத்தியதாக குமரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் 2 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அபராதம் விதித்துள்ளது.

குழித்துறையைச் சேர்ந்த மனுதாரருக்கு அரசு உதவிப் பெறும் பள்ளியில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அதன் வழக்கு விசாரணையின்போது, ஆயிரத்து 69 நாட்கள் தாமதமாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்தாமல் உத்தரவு நகல் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கல்வி துறையில் தான் அதிக அளவு வழக்குகள் பதிவாகின்றன என்று கூறிய நீதிபதிகள், ஒவ்வோரு மாவட்டத்திலும் கல்வி துறைக்கு தனி சட்ட ஆலோசகரை ஏன் நியமனம் செய்ய கூடாது என கேள்வி எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments