வாத்து மேய்க்கும் 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 6 பேர் போக்சோவில் கைது

0 6813
வாத்து மேய்க்கும் 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 6 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

புதுச்சேரியில் 2 வருடங்களாக வாத்து மேய்க்கும் 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, போக்சோ சட்டத்தின்கீழ் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தமங்கலத்தை சேர்ந்த கன்னியப்பனிடம் இருக்கும் வாத்துகளை தமிழகத்தில் இருந்து கொத்தடிமைகளாக வந்து 15 பேர் மேய்ப்பதாகவும், அதிலிருக்கும் சிறுமிகள் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தபடுவதாகவும் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், 5க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதும், அதில் ஒரு சிறுமி கர்ப்பமடைந்து பிறகு கலைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகவுள்ள வாத்து பண்ணையாளர் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments