தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 12-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 6868
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 12-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 12-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக கடலோர பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே  நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments