குஜராத் மாநில பாஜக தலைவரின் உடல் எடைக்கு எடை வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் வழங்கினர்

குஜராத் மாநில பாஜக தலைவரின் உடல் எடைக்கு எடை வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் வழங்கினர்குஜராத் மாநில பாஜக தலைவரின் உடல் எடைக்கு எடை வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் வழங்கினர்
குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு உடலின் எடைக்கு எடை 101 கிலோ வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் தானமாக அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.
சூரத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் துலாபாரம் எனும் ஒருவரின் எடைக்கு எடை பொருள்களை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.ஆர். பாட்டீலை மிகப்பெரிய தராசின் ஒருபக்கத்தில் அமர வைத்து உடல் எடை அளவிடப்பட்டது.
இதில் உடல் எடை 96 கிலோ இருந்தநிலையில், 101 கிலோ வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் அளித்தனர். அந்த வெள்ளியை நலத் திட்ட பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு அளிக்க இருப்பதாக சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
Comments