அமெரிக்க அதிபராகத் தேர்வான ஜோ பைடனுக்கும் இந்தியாவுடன் தொடர்பு..!

அமெரிக்க அதிபராகத் தேர்வான ஜோ பைடனும் இந்தியாவுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.
ஜோ பைடன் அமெரிக்கத் துணை அதிபராக இருந்தபோது 2013ஆம் ஆண்டில் மும்பைக்கு வந்தார். அப்போது பேசிய அவர், தனக்கு மும்பையில் உறவினர் உள்ளதாகவும், அவருக்கு 1972ஆம் ஆண்டில் தான் கடிதம் எழுதியதாகவும், அவரும் தானும் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் கேப்டனாகப் பணியாற்றிய ஜார்ஜ் பைடனின் வழிவந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
ஜார்ஜ் பைடன் இந்தியாவிலேயே தங்கி இந்தியப் பெண்ணை மணந்துகொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜார்ஜ் பைடன் உடன்பிறந்த கிறிஸ்டோபர் பைடன் சென்னையில் நிலையாகக் குடியிருந்ததுடன், கடற்பயணம் குறித்த ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
கிறிஸ்டோபரின் கல்லறை சென்னை கதீட்ரல் கல்லறைத் தோட்டத்தில் உள்ளதாகவும் அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
Comments