திருப்பதி: 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கட்டி வைத்து கஞ்சி காய்ச்சிய மக்கள்

திருப்பதியில் 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கட்டி வைத்து கஞ்சி காய்ச்சிய மக்கள்
திருப்பதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சித்தூர் மாவட்டம் திருப்பதி பத்மா நகரில் 8 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முன்னா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து குழந்தையின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், பெண்கள் உள்பட பலர் சிறுமியை அவனிடம் இருந்து மீட்ட பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முன்னாவை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments