அர்னாப் ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 967
அர்னாப் ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் உயர்நீதிமன்றம் முடிவு

மும்பையில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீது மும்பை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது.

அர்னாப்பை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உள்ளூர் பாஜக தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அலிபாக் சிறையில் செல்போன் பயன்படுத்தியதால் ,தல்ஜோன் சிறைக்கு மாற்றப்பட்ட அர்னாப் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தாம் தாக்கப்பட்டதாகவும் ஊடகத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments