மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்னிடம் வாலாட்டினால் கை, கால், விலா எலும்பை உடைப்பேன் - திலீப் கோஷ் சர்ச்சை பேச்சு

மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்னிடம் வாலாட்டினால் கை, கால், விலா எலும்பை உடைப்பேன் - திலீப் கோஷ் சர்ச்சை பேச்சு
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தன்னிடம் வாலாட்டினால் அவர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என, மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைப் பேச்சுகளுக்கு சொந்தக்காரரான திலிப் கோஷ், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டு வீழ்த்துவோம் என பேசியவர். இந்த நிலையில், தன்னிடம் வாலாட்டும் திரிணமுல் தொண்டர்கள் தங்களை 6 மாதங்களுக்குள் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களது கை, கால்கள், விலா எலும்புகள், தலை உள்ளிட்டவை உடைக்கப்படும் என்றும், வீட்டுக்குச் செல்வதற்கு முன் அவர்கள் மருத்துவமனை செல்ல நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
Comments