அமெரிக்காவின் கொரோனா நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்?

அமெரிக்காவின் கொரோனா நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்?
கொரோனா கட்டுப்பாட்டுக்காக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் ஏற்படுத்த உள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட 43 வயதான விவேக் மூர்த்தி, ஒபாமா காலத்தில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்ற உச்ச பதவியில் நியமிக்கப்பட்டவர்.
டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் விவேக் மூர்த்தியை பதவியில் இருந்து நீக்கினார். அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் விவேக் மூர்த்தி, பைடனின் முக்கிய ஆலோசகராக இருந்தார்.
Comments