அடுத்த 7 ஆண்டுகளில் 28 புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்ட்

0 7238
அடுத்த 7 ஆண்டுகளில் 28 புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்ட்

அடுத்த 7 ஆண்டுகளில் 28 புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்ட்  மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அந்நிறுவன தலைமை செயலதிகாரி வினோத் தாசரி அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்ட் திட்டமிட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் 250 சிசி முதல் 750 சிசி வரையிலான திறன் கொண்டவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments