தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர் கலப்பால் நுரை ததும்ப ததும்ப பெருக்கெடுத்து ஓடும் தென்பெண்ணையாறு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீரில் நுரை பொங்கி குவியல் குவியலாக தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு வரும் 560 கனஅடி நீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை பயன்படுத்தி, தொழிற்சாலைகள் கழிவுநீர் வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், நுரைகள் பொங்க ஆற்று நீர் பாய்ந்தோடுகிறது. மதகு பகுதிகளில் குவியல் குவியலாக நுரைகள் தேங்கி நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுவட்டார மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Comments