தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தினால் மட்டுமே நிதி உதவி அளிக்கப்படும் - யூ.ஜி.சி

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தினால் மட்டுமே நிதி உதவி அளிக்கப்படும் - யூ.ஜி.சி
தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தினால் மட்டுமே நிதி உதவி அளிக்கப்படும் என யூ.ஜி.சி என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
இதன் செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்டு உள்ள ஒரு அறிவிப்பில், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறித்த முழுமையான தகவல்களை, வித்வான் மற்றும் ஐஆர்ஐஎன்எஸ் என அழைக்கப்படும் இந்திய ஆராய்ச்சி தகவல் தொடர்பு அமைப்பு ஆகிய தளங் களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
எனவே, வித்வான், ஐஆர்ஐஎன்எஸ் தளங்ளில் பதிவு செய்யும் உயர்கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் மட்டுமே யுஜிசி மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கும் நிதியுதவியை பெற முடியும் என ரஜினிஷ் ஜெயின் விளக்கம் அளித் துள்ளார்.
Comments