24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 10407
24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 10 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments