அதிபராக தேர்வான ஜோ பைடன் குறித்த சுவாரசியங்கள்..!

அதிபராக தேர்வான ஜோ பைடன் குறித்த சுவாரசியங்கள்..
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் குறித்து பல சுவராசியமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
அமெரிக்காவின் வரலாற்றில், ஜான் எஃப் கென்னடிக்குப் பிறகு அதிபராகும் இரண்டாவது கத்தோலிக்க கிறித்தவர் ஜோ பைடன் ஆவார்.
கார் பிரியரான அவர் தமது தந்தை பரிசளித்த 67 மாடல் கோர்வெட்டே ஸ்டிங்ரே காரை இன்னும் வைத்துள்ளார். பைடனுக்கு சிறுவயதில் திக்குவாய் உண்டு.
எட்டு ஆண்டு காலம் துணை அதிபராக இருந்த போது, வெள்ளை மாளிகையில், அவரும், அதிபர் ஒபாமாவும் தினமும் சேர்ந்தே மதிய உணவு அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஜோ பைடனுக்கு ஐஸ் கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்கலேட் சிப் ஐஸ்கிரீம் என்றால் அவர் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்.
Comments