அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அபார வெற்றி...இசை ஒலித்தும், நடனமாடியும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

0 1880
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அபார வெற்றி...இசை ஒலித்தும், நடனமாடியும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அவரது ஆதரவாளர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். வாஷிங்டனில் கூடிய பைடனின் ஆதரவாளர்கள் சாலைகளில் ஒன்றாக மது அருந்தியும், நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சாண்டியாகோ நகர வீதிகளில் ஏராளமானோர் திரண்டு, ஆடிப்பாடியபடி ஜோ பைடனின் வெற்றியைக் கொண்டாடினர்.

மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் உருவப்படங்கள் முன்பாக சிலர் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். கடற்கரைப் பகுதியில் குவிந்த பைடனின் ஆதரவாளர்கள் வாகனங்களில் சென்றோருக்கு வாழ்த்துகளை கூறியும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மிச்சிகன் நகரின் மையப்பகுதியில் குவிந்த மக்கள் இசைக்கருவிகளை இசைத்து, குழுவாக நடனமாடி தங்கள் ஆரவாரத்தைக் காட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments