ஏர் இந்தியா மூத்த நிர்வாகி மீது பாலியல் துன்புறுத்தல் புகார், மத்திய அமைச்சருக்கு ஏர் இந்தியா விமான பணிப்பெண் கடிதம்

0 353

ஏர் இந்தியா மூத்த நிர்வாகி, தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக, ஏர் இந்தியா விமான பணிப்பெண், விமானப்போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்து உள்ளார்.

"நீதி தேவைப்படுகிறது" என்ற தலைப்பில் விமானப்பணிப்பெண் எழுதியிருக்கும் கடிதத்தில், ஒரு மூத்த நிர்வாகி கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக புகார் அளித்தால், அந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, புகாரை பரிசீலிப்பதாக மட்டுமே ஏர் இந்தியா நிர்வாகம் கூறுவதாக குமுறியுள்ளார். மூத்த நிர்வாகியின் பெயரை, தங்களை சந்திக்கும்போது வெளிப்படுத்துவேன் என்றும் விமானப்போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் விமான பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைனைவிட ((Harvey Weinstein))  மோசமான பாலியல் வெறிபிடித்தவராக அந்த மூத்த நிர்வாகி இருப்பதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏர் இந்தியா விமான பணிப்பெண் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகார் கடிதத்தின் நகலை, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் அனுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments