இந்தியாவுக்கு மிகவும் ஆதரவானவர் ஜோ பைடன் - தொழிலதிபர் சாண்ட் சிங் சத்வால்

0 1320
இந்தியாவுக்கு மிகவும் ஆதரவானவர் ஜோ பைடன் - தொழிலதிபர் சாண்ட் சிங் சத்வால்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் இந்தியாவின் நண்பர் , இந்தியாவுக்கு மிகவும் ஆதரவானவர் என்று இந்திய அமெரிக்க தொழிலதிபர் சாண்ட் சிங் சத்வால் தெரிவித்துள்ளார்.

டிரீம் ஹோட்டல் குழும நிறுவனரான சத்வால், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் உள்பட உலக நாடுகளில் உணவகங்களை நடத்தி வருகிறார். ஜோ பைடன் வெற்றி அனைத்து அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று அவர் கூறினார்.

மன்மோகன் சிங் ஆட்சியின்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய செனட்டரான ஜோ பைடன் தான் முதலில் முன் வந்தார் என்றும் சத்வால் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments