மகத்தான வெற்றியை அளித்த அமெரிக்க வாக்காளர்களுக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிசும் நன்றி

0 6433
மகத்தான வெற்றியை அளித்த அமெரிக்க வாக்காளர்களுக்கு ஜோ பைடனும், கமலா ஹாரிசும் நன்றி

தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகி, ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் வில்மிங்டன் பகுதியில் திரண்ட ஆதரவாளர்கள் பொதுமக்கள் மத்தியில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினர்.

அமெரிக்காவுக்குப் புதிய நாள் உதயமாகியுள்ளது, மக்கள் மகத்தான வெற்றியை அளித்துள்ளனர் என்றும் மக்களின் நம்பிக்கையை நாங்கள் வென்றுள்ளோம் என்றும் ஜோ பைடன் தெரிவித்தார். மக்கள் தெளிவாக மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளனர் என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு பணியாற்றுவோம் என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

சிவப்பு நீலம் என அமெரிக்காவை இனி பிரித்துப் பார்க்க மாட்டோம் என்றும் முழு அமெரிக்காவுக்கும் பணியாற்றுவோம் என்றும் ஜோ பைடன் உறுதியளித்தார்.

பின்னர் தமது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தார் ஜோ பைடன். வாண வேடிக்கைகளை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். டிரோன் மூலம் அமெரிக்க வரைபடம், ஜோ பைடனின் பெயர் போன்றவை காட்சியளித்து பார்வையாளர்களைக் கவர்ந்தன.

முன்னதாக பேசிய கமலா ஹாரிஸ் சிறந்த ஜனநாயகத்தை அமைப்பதற்கான ஆற்றல் மக்களிடம் தான் உள்ளது என்றும் ஜனநாயகத்தன்மையை மக்கள் காப்பாற்றி உள்ளனர் என்றும் தெரிவித்தார். வெற்றிக்காக உழைத்த பெண்கள், கருப்பினத்தவர் உள்பட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தமது வெற்றி தருணத்தில் தாயை நன்றியுடன் நினைத்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments