10ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை...திருமலைப் பாதையில் வாகனம் செல்ல புதிய கட்டுப்பாடு

0 7299
10ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை...திருமலைப் பாதையில் வாகனம் செல்ல புதிய கட்டுப்பாடு

10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் திருமலை மலைப்பாதையில் இயக்க இனி அனுமதி இல்லை என்று திருப்பதி திருமலை கூடுதல் எஸ்.பி. முனிராமய்யா தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கின்போது மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாததால் திருமலையில் பசுமையான சூழ்நிலை நிலவியது. அதனை தொடர்ந்து பராமரிக்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

எனவே 10ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட அதாவது 2010ஆம் ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் திருமலை மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாது என்று கூறிய அவர், இதனை பக்தர்கள் கவனத்தில் கொள்ள அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments