”ஜன்னல் கம்பியை அறுத்து கைவரிசை காட்டிய களவாணி”... சப்தம் கேட்டு வந்த கீழ் வீட்டுக்காரருக்கு விபூதி அடித்த திருடன்

0 3590
”ஜன்னல் கம்பியை அறுத்து கைவரிசை காட்டிய களவாணி”... சப்தம் கேட்டு வந்த கீழ் வீட்டுக்காரருக்கு விபூதி அடித்த திருடன்

சென்னையில் பட்டப்பகலில் கார்பெண்ட்டர் ஒருவரது வீட்டில் 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புரசைவாக்கத்தைச் சேர்ந்த கைலாஷ் சந்திரா என்ற அந்த கார்ப்பெண்டர், வேலைக்காக வெளியே சென்றுள்ளார். கைலாஷ் சந்திரா வீட்டுக்கு வந்த கொள்ளையன், வீட்டின் பின்பக்கம் கிடந்த கட்டிங் இயந்திரத்தைக் கொண்டு ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே இருந்த 10 லட்ச ரூபாயை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கீழ்தளத்தில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் கொள்ளையனைப் பார்த்து இருக்கிறார். ஆனால் அடிக்கடி வெளிநபர்கள் வந்து செல்லும் வீடு என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஜன்னல் கம்பிகளை அறுக்கும்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு வினவியபோது, ‘வேலை நடக்கிறது’ என கொள்ளையன் இந்தியில் கூறியதாக வாக்குமூலம் அளித்த கிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments