தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ. 4.29 கோடி, 519 சவரன் தங்கம்,6.5 கிலோ வெள்ளி பறிமுதல்

0 5331
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ. 4.29 கோடி, 519 சவரன் தங்கம்,6.5 கிலோ வெள்ளி பறிமுதல்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 4 கோடியே 30 லட்ச ரூபாய், 519 சவரன் தங்கம் கைப்பற்றப்பட்டதுடன், லஞ்சம் பெற்ற அரசு அலுவலர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 1 முதல் நவம்பர் 6 வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை 54 அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. இதில் கணக்கில் காட்டப்படாத 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய், 519 சவரன் தங்கம், ஆறரைக் கிலோ வெள்ளி ஆகியன கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்ட அலுவலர்களைப் பொறிவைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 16 அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments