தங்கக்கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கேரள அமைச்சருக்கு சம்மன்

0 713
தங்கக்கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கேரள அமைச்சருக்கு சம்மன்

தங்க கடத்தல் வழக்கில், கேரள அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு, (KT Jaleel) சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக, என்ஐஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை  விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தங்க கடத்தலில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், திங்கட்கிழமையன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு, சுங்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments