பசுமைப் பட்டாசு விற்பனைக்கும் வெடிக்கவும் அனுமதி என கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு

0 1341
பசுமைப் பட்டாசு விற்பனைக்கும் வெடிக்கவும் அனுமதி என கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பசுமைப் பட்டாசுகளின் விற்பனைக்கும், அவற்றை வெடிப்பதற்கும் அனுமதி அளித்துள்ளார்.

மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்றுத் தீபாவளிக்கு வெடிகள் வெடிப்பதற்குத் தடை விதிப்பதாகக் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா முதலில் அறிவித்தார்.

எடியூரப்பா இந்துக்களுக்கு எதிரான முடிவை எடுத்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இதனால் தனது முடிவை மாற்றிக்கொண்ட அவர், முந்தைய அறிவிப்பைத் திரும்பப் பெற்றதுடன், பசுமைப் பட்டாசுகள் விற்பதற்கும், அவற்றை வெடிப்பதற்கும் அனுமதிப்பதாக அறிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments