பால் தொட்டியில் அமர்ந்து குளித்த ஊழியர்... நிறுவனத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பால் தொட்டியில் அமர்ந்து குளித்த ஊழியர்... நிறுவனத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்
துருக்கியில் பால் நிறுவனம் ஒன்றில் பால் தொட்டியில் அமர்ந்து குளித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். கொன்யா (konya) என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பால் நிறுவனத்தில், ஊழியர் ஒருவர் பால் தொட்டியில் அமர்ந்து அதில் உள்ள பாலை தலைக்கு ஊற்றி குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து பாலில் குளித்த நபரையும் அதை வீடியோவாக பதிவு செய்த நபரையும் போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி, பால் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Comments