நடிகர் விஜயை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது...தந்தை எஸ்ஏசி பகீர் புகார்

0 14256
நடிகர் விஜயை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது...தந்தை எஸ்ஏசி பகீர் புகார்

நடிகர் விஜயை சுற்றி மிகவும் டேஞ்சரான ஒரு விஷயம் நடந்து கொண்டிருப்பதாக அவரது தந்தை எஸ்ஏசி கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் சில கிரிமினல்கள் இருப்பதாகவும் அவர்களால் விஜய்க்கு ஆபத்து நேரிடலாம் எனவும் எஸ்ஏசி பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது தந்தை எஸ்ஏசி தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து எஸ்ஏசியின் மனைவியும் விஜயின் தாயுமான ஷோபாவும் விலகியுள்ளார். இந்த நிலையில் பேசிய எஸ்ஏசி, தான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே நடிகர் விஜயின் நன்மைக்கு தான் என்று கூறியுள்ளார்.

இதனை விஜய் விரைவில் புரிந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது புகைப்படம் மற்றும் பெயரை கட்சியில் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக விஜய் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய எஸ்ஏசி, கூறயது போல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து தன்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் ரசிகர் மன்றம் என்பது தன்னுடைய அமைப்பு என்றும் அதனை இயக்கமாக மாற்றிய போது நிறுவனராக தாமே இருந்ததாகவும் எஸ்ஏசி கூறியுள்ளார். எனவே அந்த இயக்கத்தை தற்போது தான் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எல்லா தந்தை மகனைப் போலவே தங்களுக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை வரும் என்றும் இருவரும் பேசாமல் இருப்பது சாதாரணமான விஷயம் தான் என்றும் எஸ்ஏசி கூறியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று எஸ்ஏசி தெரிவித்துள்ளார். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார் அதிலிருந்து அவரை காப்பாற்றவே தான் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜயை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும் அவர்களால் விஜயை சுற்றி ஒரு டேஞ்சரான விஷயம் நடந்து கொண்டிருப்பதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை அவராக வெளியிட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர் விஜயை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருப்பதாக அவரது தந்தையே கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments