பழனியில் 'நெற்றிக் கண்' ஆட்டுக்குட்டி .... அதிர்ச்சியில் மக்கள்!

0 6259

பழனியில் நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

பழனி இடும்பன் நகரைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவர் 20 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் , வளர்த்து வந்த ஆடு இன்று 2 குட்டிகளை ஈன்றது. அதில் , ஒரு ஆட்டுக்குட்டிக்கு நெற்றியில் கண்கள் இருந்ததை கண்ட அழகம்மாள் ஆச்சரியமும் அதிர்ச்சியமும் அடைந்தார்.

ஆட்டுக்குட்டியை கண்ட முதியவர்கள் சிலர், சிவ பெருமானின் நெற்றிக்கண்ணுடன் ஆட்டுக்குட்டிக்கு நெற்றிக்கண் இருப்பதால், உலக அழிவுக்கு அறிகுறியாக இருப்பதாக கூறி அங்கிருந்த மக்களை பயமுறுத்தினர். நெற்றிக்கண் ஆட்டுக்குட்டியை ஏராளமான மக்கள் ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர். பொதுவாக, இப்படி பிறக்கும் குட்டிகள் உடனே இறந்து விடும், ஆனால், இந்த ஆட்டுக்குட்டி உயிருடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments