டாட்டா பவர் நிறுவனத்திடம் இழப்பீடு பெற பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

0 528
டாட்டா பவர் நிறுவனத்திடம் இழப்பீடு பெற பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மும்பையில் அக்டோபர் 12ஆம் நாள் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதற்கு டாட்டா பவர் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மும்பையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் பெஸ்ட் நிறுவனம் டாட்டா பவர் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெறுகிறது. இந்நிலையில் அக்டோபர் 12ஆம் நாள் மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

சராசரியாக மாதம் இரண்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெஸ்ட் நிறுவனத்துக்கு மின்வெட்டால் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு டாட்டா பவர் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments