சாலையில் சதிராட்டம் ஆம்புலன்சில் அட்டகாசம்.. புவனா ஒரு கேள்விக்குறி? சிசிடிவியால் சிக்கினார்

0 16037

கோவை துடியலூர் அருகே கடையை காலி செய்ய மறுத்ததால், பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடியதோடு தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து அட்டகாசம் செய்தார். அவரால் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்சுக்குள் ஏறி அமர்ந்து கொண்டு அடாவடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு சுவாதி கார்டன் பகுதியில் புவனேஷ்வரி என்பவருக்கு சொந்தமான ஒரு கடையை 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்த லட்சுமி என்பவர், அதில் மளிகைக் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், வாடகைக்கு வந்த 40 நாட்களிலேயே லட்சுமியின் கடையைக் காலி செய்ய சொல்லி புவனேஷ்வரி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது. லட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடையை காலி செய்ய தடை ஆணை பெற்றார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மினி ஆட்டோவை கொண்டு வந்து கடைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை திருப்பி விட்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கடைக்கு புதிய பூட்டையும் போட்டுச் சென்றுள்ளனர்.

கூலிப்படையை வைத்து மொத்த பொருட்களையும் புவனேஷ்வரி களவாடிச்சென்றதாக துடியலூர் போலீசில் லட்சுமி புகார் அளித்தார்.

காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்து ஆத்திரமடைந்த புவனேஷ்வரி வெள்ளிக்கிழமை மாலை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வந்து லட்சுமிக்கு வாடகைக்கு கொடுத்திருந்த கட்டிடத்தையே இடிக்கும் பணியை தொடங்கினார். இதை தடுக்க வந்த அவரது சகோதரர் ராஜசேகரன் என்பவரையும், லட்சுமி மற்றும் அவரது சகோதரி உள்ளிட்ட 3 பேரையும் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கி அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

அங்குவர வழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த ராஜசேகரன் , லட்சுமி மற்றும் அவரது சகோதரி ஆகியோரை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்டபோது அவர்களை தாக்கிய புவனேஷ்வரியும் வாண்டடாக வந்து ஆம்புலன்ஸில் ஏறி கொண்டு தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் கூறி நாடகமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது

பின்னர் யாருக்கோ போன் செய்து நான் 108ல் போகிறேன் என்னை காப்பாத்துக்கள் ? என்று புவனேஷ்வரி அலப்பறை செய்ததால், அவரை ஆம்புலன்ஸ் ஊழியர் இறங்கச்சொல்லியும், கதவை மூட விடாமல் தடுத்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு அடம் பிடித்தார்.

இதைப் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர், நாங்கள் அரசு ஊழியர் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்று எச்சரித்ததும் அசைந்து கொடுக்காமல் இருந்தவரை காவலர் ஒருவர் வந்து எச்சரித்து அழைத்துச்சென்றார்

இதையடுத்து காயமடைந்த மூவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக துடியலூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறுக்கு மேல் தவறு செய்ததோடு வீதியில் சதிராட்டம் ஆடிய புவனேஸ்வரி காவல்துறையினரின் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments