பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது... மூன்று பிள்ளைகள் இருந்தும் கவனிக்க யாருமில்லாத ஏக்கத்தில் தீக்குளித்த மூதாட்டி

0 4676
பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது... மூன்று பிள்ளைகள் இருந்தும் கவனிக்க யாருமில்லாத ஏக்கத்தில் தீக்குளித்த மூதாட்டி

சென்னை வியாசர்பாடியில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என எண்ணி 72 வயதான மூதாட்டி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மகள் உட்பட மூன்று பிள்ளைகள் இருந்தும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மூதாட்டி வசந்தாவை தனியாக விட்டுச் சென்றதாகவும், அருகிலேயே மகன்களும் மகள்களும் வசித்து வந்தாலும், ஆதரவு இல்லாமல் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையுடன் இருந்த வசந்தா, இனி வயதான காலத்தில் பிள்ளைகளுக்கு  பாரமாக இருக்கக் கூடாது என்று கருதி தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்குப் போராடும் நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments