கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்ள நாம் நம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

0 2498
கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்ள நாம் நம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்ள நாம் நம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா - இத்தாலி இடையே காணொலி காட்சி முறையில் நடைபெற்ற மாநாட்டில் இத்தாலி பிரதமருடன் பேசிய மோடி, வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இத்தாலியில் கொரோனா பரவலால் உருவான இக்கட்டான நிலைமையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு சீரடைந்த பின் இத்தாலி எம்பிக்களை இந்தியாவில் வரவேற்பதற்கான சூழல் ஏற்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments