நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றத் தனித்துறை அமைத்தால் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 990
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றத் தனித்துறை அமைத்தால் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித் துறையையோ அல்லது அமைப்பையோ அமைக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வினவியுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்றனர்.

தமிழகத்தில் 1980ஆம் ஆண்டு எத்தனை நீர்நிலைகள் இருந்தன? இப்போது எத்தனை நீர்நிலைகள் உள்ளன? நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினர். இது குறித்துப் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments