தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

0 2690
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் நள்ளிரவு முதல் காலை வரை விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் காலை வரை கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகள், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய ஊர்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

சென்னையில் கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் லேசான மழை பெய்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments